இலவச பொருட்களை எரிக்கும் விஜய் ரசிகர்கள்- வைரல் வீடியோ
சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டங்களின் கீழ் பெறப்பட்ட பொருட்களை எரிக்கும் காட்சிகள் சர்ச்சையானது. தற்போது விஜய் ரசிகர்கல் ஆங்காங்கே அரசு வழங்கிய பொருட்களை தீயிட்டு எரிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்கார் படத்தில் இயக்குநர் முருகதாஸ் கவுர வேடத்தில் அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை தீயிட்டு எரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தமிழக அரசு வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்தது. இதனால் வேறுவழியில்லாமல் அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்கியது சர்கார் தரப்பு.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விஜய் ரசிகர்கள், தங்களது வீடுகளில் இருந்த அரசின் இலவச பொருட்களை வீதிகளில் போட்டு உடைப்பதும் தீயிட்டு எரிப்பதுமான செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். சர்கார் படப் பாடல்களை பின்னணியில் ஓடவிட்டு தாங்கள் பொருட்களை எரிக்கும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
விஜய் ரசிகர்களின் இந்த வீடியோக்கள் இப்போது வைரலாக பரவி வருகிறது.