ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு...ட்விட்டரில் எச். ராஜா கிண்டல்
திமுக தலைவர் ஸ்டாலினை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசியது குறித்து தமது ட்விட்டரில் கிண்டலாக பதிவு போட்டிருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணியில் திமுக இடம்பெறும் என ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவிட்டுள்ளதாவது:
சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு. திமுக வால் ஆந்திராவில் TDP க்கு பல சதவிகிதம் ஓட்டு அதிகரிக்கும். அதேபோல் தமிழகத்தில் TDP யால் திமுக விற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அதிகம். அரசியல் பூகம்பத்தின் துவக்கம்.
இவ்வாறு எச். ராஜா பதிவிட்டிருக்கிறார்.