2.0 ஒரு சகாப்தம் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட்!
2.0 திரைப்படம் ஒரு சை-ஃபை சகாப்தம் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வியந்து பாராட்டியுள்ளார்.
லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 2.0 படம் வரும் நவ.,29ம் தேதி ரிலீசாகவுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் ஏ.ஆர் ரஹ்மான் ஈடுபட்டுள்ளார். படத்தின் 6வது ரீலுக்கான இசை கோர்ப்பு பணியில் ஈடுபட்ட போது படத்தின் பிரம்மாண்டம் மற்றும் காட்சிகளின் மிரட்டலை கண்டு தான் வியந்ததாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”2.0 படத்தின் 6வது ரீலுக்கான இசைக்கோர்ப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்.. ஓ மை காட்.. என்ன ஒரு உணர்வுப்பூர்வமான சை-ஃபை (அறிவியல் புனைவு திரைப்படம்) சகாப்தம்” என பாராட்டியுள்ளார்.
ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளது. இதுவரை இந்திய சினிமா வெளிவராத நாடுகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.