டிசம்பர் 20 அய்யா வருகிறார்!
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகிறது.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் விஜய்சேதுபதியை வைத்து இயக்கியுள்ள புதிய படம் சீதக்காதி. இந்த படத்தில் விஜய்சேதுபதி நாடக கலைஞர் அய்யா கதாபாத்திரத்தில் 80வயது முதியவர் தோற்றத்தில் நடித்துள்ளார். பிளாஷ்பேக்கில் இளமையான தோற்றத்திலும் நடித்துள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு படம் ரிலீசாகவுள்ளது டிசம்பர் 20 மற்றும் 21ம் தேதிகளில் நிறைய படங்கள் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
செக்கச்சிவந்த வானம், 96 படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்த வெற்றி படத்தை கொடுக்க விஜய்சேதுபதி தயாராகி விட்டார். இந்த மனுஷன் மட்டும் எப்படி வாரத்திற்கு ஒரு படம் கொடுக்கிறார் என வெளியிடப்பட்ட மீம்களுக்கு அவரே வடசென்னை படம் வெளியான நிலையில், பதிலும் கூறிவிட்டார்.
சீதக்காதி படத்தை தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ் படமும் ரிலீசுக்கு ரெடியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.