கே.ஜி.எஃப் டிரெய்லர் ரிலீஸ்!
நடிகர் விஷாலின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. கன்னட நடிகர் யாஷ் இதில் நடித்துள்ளார்.
விஜய் கிரகந்தூர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படமான கே.ஜி.எஃப் படம் பல பாகங்களாக ரிலீசாகவுள்ளன. இதனை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இப்படத்தில், யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீசாகிறது. படத்தின் டிரெய்லர் 300 பருத்தி வீரர்கள் போல உள்ளது. கன்னட நடிகர் யாஷ், தனது அபாரமான நடிப்பை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.