தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வு நடைபெற்றது
தமிழகத்தில் 6.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த குரூப் 2 தேர்வு இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக, டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது தேர்வுகள் நடத்துகின்றன. அந்த வகையில், இந்து தமிழகம் முழுவதும் குரூப் 2 நேர்முக பதவி தேர்வு இன்று நடைபெற்றது. அரசு துறைகளில் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, தேர்வில் பங்கேற்க விரும்பிய பலர் குரூப் 2 தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கினர். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்மூலம், குரூப் 2 தேர்வுக்கு 6.26 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
குரூப் 2 தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 2268 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இதில், சென்னையில் மட்டும் 248 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வில், கண்காணிப்பு பணிக்காக 6 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தேர்வு எழுதுபவர்களுக்காக சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டன. அரசு துறைகளில் உள்ள 1199 பணியிடங்களுக்கு 6.26 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.