படிப்படியாக குறையும் பெட்ரோல் விலை: லிட்டருக்கு 17 காசுகள் குறைந்தது

சென்னையில் லிட்டருக்கு 17 காசுகள் இன்று குறைந்த நிலையில், பெட்ரோல் விலை ரூ.80.73க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணத விலை உயர்வை எட்டியது. தினசரி நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து லிட்டருக்கு 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகினர்.

பல்வேறு கட்சிகளும் பெட்ரோல் டீசல் உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையத் தொடங்கியது. அன்று முதல் படிப்படியாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

இந்நிலையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் குறைத்து இன்று ரூ.80.73க்கு விற்பனையாகிறது. இதேபோல், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து ரூ.76.59க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More News >>