ஓடும் ரயிலில் கர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை: புகை பிடித்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓடும் ரயிலில் புகைப்பிடிப்பதை தட்டிக் கேட்ட கர்ப்பணியை கழுத்து நெரித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பீகார் சென்றுக் கொண்டிருந்த ஜாலியன்வாலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏராளமான பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் ரயில் நிலையத்தை நெருங்கியபோது பயணி ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருந்தார். இதைக்கண்டு ஆத்தரமடைந்த கர்ப்பிணி ஒருவர் அந்த பயணியை புகைப்பிடிப்பதை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர் கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் கொடூரமாக கழுத்தை நெரித்தார். இதில், மூச்சித்திணறி கர்ப்பிணி மயங்கி விழுந்தார். இதையடுத்து, உடனடியாக ரயிலை நிறுத்தி கார்டுக்கு தகவல் தெரிவித்து பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், கர்ப்பிணி மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட நபரின் மீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இன்னும் ஓரிரு மாதங்களில் குழந்தை பெற்றெடுக்க வேண்டிய கர்ப்பிணி பெண், கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.