வங்கக்கடலில் கஜா புயல்- தமிழகத்துக்கு ரெட் அலர்ட்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியுள்ளதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது.
அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இலங்கை சார்பில் கஜா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு தென்கிழக்கே 990 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது, 2 அல்லது 3 நாட்களில் சென்னையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை வரும் 14ம் தேதி புயல் தென்கிழக்கு திசையில் புதுச்சேரி நகரும் என்றும், 15ம் தேதி காலை புதுவை அருகே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கஜா புயலின் எதிரொலியால் கடலின் மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனவும், இதனால், மீனவர்கள் 12ம் தேதி முதல் புயல் கடக்கும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்கு கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கஜா புயல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நெருங்கும் வரை வறண்ட வானிலையே காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.