சந்திரபாபு நாயுடு சந்திப்பால் எந்த மாற்றமும் நிகழாது- தமிழிசை திட்டவட்டம்

எதிர் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளரை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன்,

பாஜகவிற்கு எதிரான சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி சந்திப்பு எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றார். சந்திரபாபு நாயுடு சந்திக்கும் முன்பே திமுக தங்களுக்கு எதிரி கட்சிதான் என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த சந்திப்பின் மூலம் எந்த வித மாற்றமும் அரசியலில் நிகழப்போவதில்லை என்று கூறினார்.

மேலும் சந்திரபாபு நாயுடு தங்கள் மக்களையும், தொண்டர்களையும் ஏமற்றியிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

ஸ்டாலினுக்கு சந்திரபாபு நாயுடு மூலம் ராகுல் அனுப்பிய செய்தி- EXCLUSIVE

More News >>