புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்
புற்றுநோய் காரணமாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
மத்திய அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் (59). கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த இரண்டு மாதங்களாக அனந்தகுமார் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். பின்னர், அனந்தகுமார் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதன் பிறகு, அனந்த குமாரின் உடல்நிலை சீரானது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனந்த குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அமைச்சர் அனந்த குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.