மாவோயிஸ்டுகளின் மிரட்டலுக்கு இடையே சத்தீஸ்கரில் வாக்குப் பதிவு!

சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 18 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே காலை முதல் நடைபெற்று வருகிறது.

மொத்தம் 90 இடங்களைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் பகுதியில் உள்ள 12 தொகுதிகளுக்கும், ராஜ்நந்தகான் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

190 வேட்பாளர்கள் போட்டியிடும் இதில் பாஜக, காங்கிரஸ், அஜித் ஜோகி கூட்டணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மாவேயிஸ்டுகளின் மிரட்டலால் போலீஸ், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இரண்டு கட்டத் தேர்தல்களும் முடிவடைந்த பின், வரும் டிசம்பர் 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>