தீவிரமாகும் கஜா புயல் - 24 மணி நேரத்தில் சூறாவளி!
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்; வரும் 15-ந் தேதி சென்னை-நாகை இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு கிழக்கே-வடகிழக்கே 750 கி.மீ தொலைவில் வங்கக் கடலில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்புயலானது வரும் 15-ந் தேதி சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக கடலூர், புதுச்சேரி, நாகை உள்ளிட்ட இடங்களில் கனமழைபெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கஜா புயல் கரையை கடக்கும் போது, மணிக்கு, 100 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசும். இதனால் அலைகள் 14 அடி உயரம் எழ வாய்ப்புள்ளதாகவும் துறைமுகம் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.