ரஜினி வீட்டுக்கு வரும் புது மாப்பிள்ளை விசாகன் - Exclusive
ரஜினிகாந்தின் 2-வது மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் 2-வது திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன்தான் மாப்பிள்ளையாம்.
ரரஜினி வீட்டுக்காக ‘தரகர்’ அவதாரமெடுத்த அரசியல் தலைவர்!
ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கு அஸ்வின் என்பவருடன் 2010-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.
செளந்தர்யா- அஸ்வின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அஸ்வின் 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இருவரும் கடந்த ஆண்டு சட்டப்பூர்வமாக விவகாரத்து பெற்றனர். இந்நிலையில் செளந்தர்யாவுக்கு 2-வது திருமணத்தை நடத்துவதில் ரஜினிகாந்த் குடும்பத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
தற்போது செளந்தர்யாவுக்கு 2-வது திருமணம் நடைபெற உள்ளது. பிரபல மருந்து நிறுவனத் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனும் சவுந்தர்யாவும் காதலித்து வந்தனர்.விசாகன் , லண்டனில் எம்.பி.ஏ. படித்தவர். அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்துள்ளார்.
மகளின் காதலை அறிந்த ரஜினிகாந்த், விசாகனின் உறவுகளை அழைத்துப் பேசினார். கிட்டத்தட்ட 2 மாதங்களாக இந்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடந்து வந்தது. இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில், விரைவில் இத் திருமணம் நடைபெற உள்ளது.
-திலீபன்