மிக்சி, கிரைண்டர் வடிவ கேக் வெட்டி சர்கார் சக்சஸ் கொண்டாட்டம்
சர்ச்சைக்குரிய சர்கார் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மறு தணிக்கை செய்யப்பட்டு திரையிடப்பட்டது. ஆனால் விஜய் ரசிகர்களோ ஆங்காங்கே அரசின் இலவச மிக்சி, லேப்டாப் ஆகியவற்றை உடைத்தும் தீயிட்டு எரித்தும் வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக சென்னை இளைஞர்கள் இருவர் அரிவாள்களைக் கொண்டு அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பானது.
தற்போது சர்கார் படக் குழுவினரின் சக்சஸ் கொண்டாட்டமும் சர்ச்சையாகி இருக்கிறது. அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் வடிவில் பிரமாண்ட கேக் தயாரித்து கொண்டாடி உள்ளனர்.
ஏற்கனவே நடிகர் விஜய் மீது கடும் கோபத்தில் இருக்கும் தமிழக அரசு தரப்பு அவரது சொத்து விவரங்களை கணக்கெடுத்து வருகிறது. இந்த நிலையில் அரசை சீண்டும் வகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் விஜய்யும் கலந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.