வலதுசாரிகள் அரசியலால் மனிதத் தன்மை இல்லாத நிலை உருவாகிறது: பிரகாஷ்ராஜ்
வலதுசாரிகளின் பொய் அரசியலால் மனிதத் தன்மை இல்லாத நிலைமை உருவாகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:
பொய்யை நம்புவது மனிதன் இயற்கையான குணம். தற்போது நம்முடைய எதையாவது நம்பும் தன்மையை தங்களுக்கு சாதகமாக மாற்றும் வன்முறை நிகழ்த்தி வருகிறது
வலதுசாரிகளின் அரசியல் அவர்களுக்கு என்ன தேவையே அதை தனிமனிதர்கள் மீது திட்டமிட்டு திணித்து வருகினது. இதில் வலது சாரி ஜெயிக்குமா? இடது சாரி ஜெயிக்குமா என்பதை விட மனிதத்தன்மை இல்லாத நிலையை ஏற்படுத்திவிடும்.
கடந்த 5 வருடங்களில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் இது இன்னும் அதிகமாகி உள்ளது. அதன் விளைவு என்ன என்பதையும் நாம் பார்த்துவிட்டோம்.
நாம் பொதுவாக சாதி மீதோ, மதம் மீதோ காட்டும் அன்பை தவறாக பயன்படுத்தி கொள்கின்றனர். மனசாட்சி வேண்டும்.
இப்படியே சென்றால் மனித நேயத்தை மறந்து வாழும் நிலையை ஏற்படுத்தி விடும்.
நமக்கு என்ன வசதியோ அதை புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு இருக்கிறது.
ஆனால் இங்கு அதையும் தாண்டி நம்மை அறியாமல் நம்மை விற்பனை செய்வார்கள், நம்மை அறியாமல் நம்மை கொல்வார்கள்.
ஓரு மனிதனை கண்மூடித்தனமாக தாக்குவதற்குண்டான நம்பிக்கையை மக்களிடம் விதைத்து பாஜக. இது நம்மை தவறான முறையில் வழிநடத்துவது என்பதை உணரவே மிக கஷ்டமாக உள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.