அதிகாலையில் சுவர் ஏறி குதித்தார்... நடிகர் விஷாலை வம்புக்கு இழுக்கும் காயத்ரி லீக்ஸ் விஸ்வதர்ஷினி
பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது பாலியல் புகார் கூறிய டான்ஸர் காயத்ரியின் நெருங்கிய தோழியாக இருந்த விஸ்வதர்ஷினி இப்போது நடிகர் விஷாலை வம்புக்கு இழுத்துள்ளார்.
காயத்ரியுடன் சேர்ந்து பிரகாஷ் எம்.சுவாமி மீது நடவடிக்கை எடுக்க துணையாக இருந்தவர் விஸ்வதர்ஷினி. தற்போது அவர் காயத்ரியுடன் மோதிக் கொண்டிருக்கிறார்.
காயத்ரி தம்மை லெஸ்பியன் உறவுக்கு அழைத்ததாகவும் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார் விஸ்வதர்ஷினி. இதனிடையேக் கடந்த சில நாட்களாக காயத்ரி குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார் விஸ்வதர்ஷினி.
காயத்ரி தற்போது கோலாலம்பூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சென்னை தொழிலதிபர் பெயரைக் குறிப்பிட்டு அவர்தான் தப்பி செல்ல உதவியதாகவும் அந்த பதிவுகளில் ஒன்றில் தெரிவித்திருந்தார். அத்துடன் நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு காயத்ரி வசித்த கோபாலபுரம் அபார்ட்மெண்ட்டின் மதில் சுவர் ஏறி குதித்து வெளியேறியதாகவும் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பான சிசிடிவி பதிவை அந்த அபார்ட்மெண்ட்டின் உரிமையாளர் ராவ் என்பவர் தம்மிடம் கொடுத்ததாகவும் அப்பதிவில் விஸ்வதர்ஷினி தெரிவித்திருக்கிறார்.