எபோலா வைரஸிற்கு பலியானோர் எண்ணிக்கை 200 !

எபோலா வைரஸ் நோயினால் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  தென் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 300க்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயுற்றவர்கள் அதிகமான இரத்தத்தை இழப்பர். அவர்களது வயிற்றுப் போக்கிலும், வாந்தியிலும் இரத்தம் கலந்து இருக்கும். கடுமையான நோயுற்றவர்களின் மூக்கு, காதுகள் மற்றும் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் வழியும். இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது.

தற்சமயம் காங்கோவின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் 35 பேருக்கு சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 5420 பேர் எபோலா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

More News >>