உங்கள் தலைவன் எப்படி?

ஒரு தலைவன் என்றால் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று விதவிதமா பேசிக் கொண்டுதான்  இருக்கின்றோம். சிலருக்கு தலைவன் என்றால் உத்வேகத்தை அளிப்பவர்,  சிலருக்கு சமமாக மதிப்பவர் மற்றும் சிலருக்கோ தோழனாக இருப்பார்கள்.சரி, உங்க தலைவர் நாங்க குறிப்பிட்ட மாதிரி இருக்காரா? இல்லையானு பார்ப்போமா.

தலைவன் வெற்றியை அடைய தனக்கென்று ஒரு பார்வையை அமைத்து அதன்படி செயல்படுவான். அவற்றை தன்னுடன்  வேலை செய்யும் சக நபர்களுடன் பகிர்ந்து,  அதன்படி தன் வெற்றியை நோக்கி செயல்படுவார்.

தலைவன், தன் குழுவின் முயற்சியையும், அர்ப்பணிப்பையும் மனம் விட்டு ஊக்குவிக்கும் போது, அவர்களின் இலக்கை எளிதாக அடைய வழிவகுக்கிறது.

ஒரு நல்ல தலைவனுக்கு, தன் குழுவை எந்த அளவுக்கு உற்சாகப்படுத்த வேண்டும் என்பதை மற்றவர்களை விட நன்கு அறிந்திருப்பார்.  தன் குழுவை உற்சாகப்படுத்தி எளிதில் வெற்றியை அடைகின்றார்.

தலைவன் தன் குழுவிற்கு சேவை செய்யும் எண்ணம் முதலில் இருக்க வேண்டும். எதாவது தவறு ஏற்படின் அதை சரி செய்ய தலைவன் ஒருவன் உள்ளான் என்ற நம்பிக்கையை குழு உறுப்பினர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

சிறந்த தலைவன், தனது குழு உறுப்பினர்களின் கவலையை தனதாக்கி கொண்டு, தன் அறிவால் துன்பங்களை தீர்ப்பதோடு, அவர்களின் பலத்தை அறிந்து, தகுந்த முறையில் ஊக்கமளித்து,  தனது செயலை செய்து முடிப்பர்.

தலைவன் என்பவன் சிறந்த படைப்பாற்றலை பெற்றிருக்க வேண்டும். தனது குழு உறுப்பினர்களின் திறமையையும், படைப்பாற்றலையும் மதிக்க வேண்டும். ஏனென்றால் அவர்களின் படைப்பாற்றல் கண்டிப்பாக உங்களை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும்.

உண்மையான தலைவன் தன் குழுவுடன் தொடர்ந்து பணியாற்றி வெற்றியை அடைய வேண்டும். தனது குழுவின் தவறுக்கு தலைவனே பொறுபேற்க வேண்டும் மற்றும் திறமையாக செயல்படும் தனது குழுவிற்கு பரிசளித்து உற்சாகப்படுத்த வேண்டும்.

நல்ல தலைவன், தன் குழு உறுப்பினர்களின் தவறை, திறமையுடன் கையாண்டு, சரியான பாதையை நோக்கி முன்னேற வேண்டும். அதற்காக அவர்களை குறை சொல்லுதல் கூடாது.

தலைவன் தன்னை தொடர்ந்து முன்னேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு குழுவினரின் திறமையை கண்டறிந்து அவர்களை மேம்படுத்துதல் வேண்டும்.

சரி இங்கே கூறியவைகளில், உங்கள் தலைவர் எப்படி?

More News >>