இழந்த இடத்தை மீண்டும் பிடிப்பேன்: இலியானா சவால்!

டோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இலியானா மீண்டும் ரவிதேஜாவின் அமர் அக்பர் அந்தோனி படத்திற்காக டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார்.

படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய இலியானா, டோலிவுட்டில் மீண்டும் முன்னணி நாயகியாக மாறுவேன் என சவால் விடுத்துள்ளார். அதற்கு அமர் அக்பர் அந்தோனி படம் பெரிதும் உதவும் எனவும் கூறீனார்.

ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தில் நாயகியாக இலியானா நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்ரீனு வைத்லா இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

More News >>