ஜிமிக்கி கம்மல்! இது ஜோதிகா வெர்ஷன்!

கடந்த ஆண்டு கேரள ஆசிரியைகள் ஆடிய ஜிமிக்கி கம்மல் பாடல் இந்திய அளவில் வைரலானது. தற்போது அதனை மீண்டும் டிரெண்டிங் ஆக்கியுள்ளார் ஜோதிகா.

ராதாமோகன் இயக்கத்தில் மொழி படத்திற்கு பிறகு மீண்டும் ஜோதிகா நடித்துள்ள படம் காற்றின் மொழி. இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் வெளியான தும்ஹரி சுலு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.

விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளதால், இப்படத்தை புரமோட் செய்யும் விதமாக படத்தில் இடம்பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். பாடல் வெளியிட்ட சற்று நேரத்தில் இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் இப்பாடல் இடம் பிடித்துள்ளது.

ரேடியோ ஸ்டேஷனில் நடைபெறும் பார்ட்டியில் ஜிமிக்கி கம்மல் பாடல் இசைக்கப்படுகிறது. பாடலுக்கு ரேடியோ ஜாக்கிகள் நடனமாடுகின்றனர். ஜோதிகாவை நடனமாட அழைக்க ஜோதிகா தனது க்யூட் நடனத்தை ஆடி அசத்துகின்றார்.

More News >>