மாயமில்லை.. மந்திரமில்லை.. எலுமிச்சை நீரின் மருத்துவப் பலன்கள்.

நிறைய பேர் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் காலையில் பருகுவதை விட, இரவில் தூங்குவதற்கு முன் குடித்தால் அதிகப் பலன் கிடைக்குமாம்.

அதுவும் இரவு உணவிற்கு பிறகு ஒரு மணிநேரம் கழித்து, சூடான வெந்நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அதன் நன்மைகளோ ஏராளம்.

சரி என்னென்ன பயன்கள் என்று பார்ப்போம்

சில பேர் இரவில் தூங்காமல் ஆந்தைப் போல் விழித்திருப்பார்கள், கேட்டால் தூக்கம் வரவில்லை என்ன செய்வதென்று தெரியவில்லை என்று கூறுவார்கள். அவர்கள் இரவில் எலுமிச்சை நீர் குடித்து வந்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

நம் உடலில் இருக்கும் செல்களுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு, எலும்புகள் மற்றும் ஹார்மோனின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி  உள்ளது. அதனால் எலுமிச்சை நீரை பருகும் போது நோய் தொற்று ஏற்படாமல் நம்மை பாதுகாக்கலாம்.

உடலின் நீர் சத்தை, எலுமிச்சை நீரானது அதிகரிக்கிறது. எனவே எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க உதவுகிறது. மேலும் செரிமானத்தை அதிகரிக்கிறது.

நம் உடலில் நச்சு தன்மை சேராமல் பாதுகாக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. எலுமிச்சை நீரை தயாரிப்பதற்கு, அதிக சூடான நீரை பயன்படுத்தக் கூடாது. வெது வெதுப்பான நீரில் சர்க்கரை சேர்க்காமல் தேன் கலந்து பருகுவது நல்லது.

மேலும் இன்று சுடு நீரில் குடித்துவிட்டு நாளை குளிர்ந்த நீரில் எலுமிச்சை நீரை குடிக்கும் முறையையும் தவிர்த்து விடுங்கள். என்ன சரி தானே.

More News >>