விஜய் சேதுபதியின் ஜூங்கா பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக இயக்க இருக்கும் படம் ஜூங்கா. இந்த படத்தின் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா சாஹல் நடிக்கிறார். காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது.

விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மீசையில் தோற்றமளிப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

More News >>