ஜல்லிக்கட்டு புரட்சி- இளைஞர்களுக்கு எதிராக ராகவா லாரன்ஸ் வாக்குமூலம்

ஜல்லிக்கட்டு புரட்சியின் போது வன்முறையில் ஈடுபட்ட போலீசாருக்கு ஆதரவாக நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததைக் கண்டித்து வரலாறு காணாத எழுச்சிமிக்க போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்றன. சென்னை மெரினா கடற்கரையில் பல லட்சம் இளைஞர்கள், மாணவர்கள் இரவும் பகலுமாக அமர்ந்து அமைதிவழியில் போராடினர்.

தமிழர்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டத்தைக் கண்டு உலகமே வியந்தது. இதையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சிறப்பு சட்டத்தையும் இயற்றியது.

இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர சென்னை மெரினாவில் திரண்டிருந்த இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தினர். இதேபோல் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர்.

இத்தாக்குதல் தொடர்பாக முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை ஆணையத்திடம், போலீசாரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோர் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிதிபதி ராஜேஸ்வரன் கூறியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் மற்றும் ஹிப் ஆப் தமிழா ஆதி ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவானவர்களாக தங்களை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>