அரபு தேசத்தில் இருந்து வைட்டமின் பவை குருவி மூலம் இறக்குமதி செய்த தினகரன்- Exclusive

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. ' கையில காசு இல்லை' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சோக கீதம் வாசித்தாலும், தலைமையின் செயல்பாடுகளில் அதிதீவிர உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. காரணம், 'அரபு நாடு ஒன்றில் இருந்து இறக்குமதியான சில நூறு கோடிகள்தான்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிரான கூட்டணியை வலுவானதாக மாற்றப் போராடி வருகிறார் ஸ்டாலின். ஆளும்கட்சியான அ.தி.மு.கவும், சில கட்சிகளை தங்களோடு இணைத்துக் கொண்டு தேர்தலை சந்திக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்த இரு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ளும் அளவுக்குப் பசையோடு உள்ளன. இதில், அ.ம.மு கட்சியின் நிலைதான் படு சோகமாக இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன், செந்தில் பாலாஜி உள்பட கொஞ்சம் வசதி வாய்ப்போடு இருக்கும் நிர்வாகிகள் மட்டுமே கூட்டங்களுக்குச் செலவு செய்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் பத்து வட்டிக்குக் கடன் வாங்கித்தான் தினகரனின் செல்வாக்கை உயர்த்தப் பாடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் எம்.எல்.ஏக்களாகிப் போன 18 பேருக்கும் மாத செலவுக்குப் பணம் தர உத்தரவிட்டிருக்கிறார் சசிகலா. ஆனால், பெயரளவுக்குக்கூட கண்ணில் பணத்தைக் காட்ட மறுக்கிறார் தினகரன். ஒரே காரணம், தேர்தல் நெருக்கத்தில் பணத்தை இறக்க வேண்டும் என்பதுதானாம்.

அதனால்தான், 'என்னிடம் சுத்தமாகப் பணம் இல்லை. சின்னம்மாவிடம் கேட்டிருக்கிறேன்' என்றே கூறி வருகிறார்.

போதாக்குறைக்குக் கஜானா சாவியை விவேக்கிடம் கொடுத்து வைத்திருக்கிறார் சசிகலா.

கணக்கு வழக்குகளில் தினகரனின் கை ஓங்கிவிட்டால், தன்னை ஓரம்கட்டிவிடுவார்கள் என சசிகலா அச்சப்படுவதான் காரணம். இந்தச் சாவியைப் பறித்துக் கொள்ள பலமுறை போராடியும் தினகரனால் முடியவில்லை. இதையடுத்து, தனக்கு வேண்டிய சோர்ஸுகள் மூலம் அரபு நாடு ஒன்றில் இருந்து பல நூறு கோடிகளை இறக்குமதி செய்திருக்கிறார் என்கின்றனர் விவகாரம் அறிந்தவர்கள்.

இதைப் பற்றிப் பேசும் அவர்கள், தமிழ்நாட்டில் பல இடங்களில் தினகரனுக்குச் சொத்து இருந்தாலும் அவருடைய வரவு செலவுகள் அனைத்தும் வெளிநாடுகளில்தான். அவர் மீதான ஃபெரா வழக்குகளைக் கவனித்தாலே இது புரியும்.

இலங்கை, சீனா, இந்தோனேஷியா என தனக்குச் சாதகமாக இருக்கும் நாடுகளில் எல்லாம் அவர் முதலீடு செய்திருக்கிறார்.

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொங்கு தேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் 'குருவி' நண்பர் மூலம் பல நூறு கோடிகளை தமிழ்நாட்டுக்குள் இறக்குமதி செய்திருக்கிறார். இவை அனைத்தும் அவருடைய சொந்தப் பணம்தான். இந்த விவரத்தை வெளியில் சொல்லிவிட்டால், கட்சி நிர்வாகிகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள் என்பதால் மௌனமாக இருக்கிறார்.

இதைக் கேள்விப்பட்டு சீனியர் நிர்வாகி ஒருவர் செம கடுப்பில் இருக்கிறார். ' கைச்செலவுக்குப் பணம் கேட்டு விவேக்கிடம் கெஞ்சுகிறோம். கொஞ்சம் அள்ளிக் கொடுத்தால்தான் என்ன?' என மனதுக்குள்ளேயே குமுறி வருகிறார் அந்த சீனியர். தேர்தல் நெருக்கத்தில் இவை வெளியில் வந்தால், ரெய்டு நடத்திக் கைப்பற்றிவிடுவார்கள் என்பதால்தான் முன்கூட்டியே யோசித்திருக்கிறார் தினகரன்' என்றார் விரிவாக.

-அருள் திலீபன்

More News >>