ஜீரணிக்க முடியவில்லை: ரஜினியை கலாய்த்த கஸ்தூரி!
சென்னை விமான நிலையத்தில் நேற்று ரஜினி வந்து இறங்கியபோது செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ரஜினி சொன்ன 3 விஷயங்களும் தலைப்பு செய்திகள் ஆகின. 2 பதில்கள் பாசிட்டிவ்வாகவும், ஒரு பதில் பயங்கர நெகட்டிவ் ஆகவும் பரவி வருகிறது.
குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று ரஜினி சொன்னதற்கும், பணமதிப்பிழப்பு சரியாக அமல்படுத்தவில்லை என்றும் பா.ஜ., அரசை அனைத்து கட்சிகளும் எதிர்த்தால் அது சரியான கட்சி அல்ல என்றுதானே அர்த்தம் என ரஜினி சொன்னதும் பா.ஜ.,வை தாக்கி ரஜினி கூறியது மிகப்பெரிய விஷயமாக வைரலாக பரவியது.
இதற்கெல்லாம் மேலாக ரஜினிக்கு ஆப்பு வைத்த அந்த 7பேர் விடுதலை பற்றிய கேள்விக்கு அவர் அளித்த எந்த 7 பேர்? அவர்களை பற்றி தெரியாது என்று சொன்ன பதில்தான்.
இந்நிலையில், ட்விட்டரில் திடீர் அரசியல் செய்து வரும் நடிகை கஸ்தூரி, ”மொட்டையா கேட்டாலுமே 7 பேரு விடுதலைன்னு சொன்ன உடனே எதை பத்தின்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்போது, நம்மை வழிநடத்தப்போறாருன்னு நம்பப்படுறவர் முழிக்கலாமா? செய்திகளை தினமும் படித்து கொஞ்சம் தயாராக இருக்க வேணாமா? சாரி என்னால் ஜீரணிக்கமுடியவில்லை” என நேரடியாக ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் ரஜினி ரசிகர்கள் அவரை விமர்சித்து ட்விட்டர் போர் நடத்தி வருகின்றனர்.