200 கோடி ரூபாய் வசூல் உண்மையா? பொய்யா?
சர்கார் படம் முதல் வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் சாதனை படைத்ததாக அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தனர். ஆனால், நேற்றைய வசூல் தமிழகம் முழுவதுமே வெறும் 3 கோடி ரூபாய்தான். இதனால் 200 கோடி ரூபாய் வசூல் பொய்யா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பரலது நடிப்பில் தீபாவளியன்று வெளியானது.
வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் படம் 62 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், 2ம் நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. ஞாயிறு வரையிலான 6 நாட்களில் படத்தின் வசூல் 200 கோடி ரூபாய் கடந்து விட்டதாகவும் தெரிவித்தனர். ஆனால், திங்கள் கிழமையான நேற்று வெளிவந்த ஒரு ரிப்போர்ட்டில் தமிழகம் முழுவதும் திங்களன்று படத்தின் வசூல் 3 கோடி மட்டுமே என தெரிவித்தது.
இதனால், 200 கோடி ரூபாய் வசூல் பொய்யா? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. மேலும், படம் 150 கோடி மட்டுமே வசூலித்ததாகவும், 28 கோடி ரூபாய் வரை நஷ்டத்தை சந்தித்ததாகவும் பிரபல யூடியூப் சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. இதற்கு சன் பிக்சர்ஸ் உரிய விளக்கம் அளிக்குமா என்பது சந்தேகம்தான்.