திமிரு புடிச்சவன் ஸ்நீக் பீக் ரிலீஸ்!
திமிரு புடிச்சவன் திரைப்படம் வரும் நவம்பர் 16ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில், அதன் ஸ்நீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது.
கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திமிரு புடிச்சவன் படம் தீபாவளி ரிலீசாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் நவம்பர் 16ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்நிலையில், தற்போது படத்தை புரமோட் செய்ய படத்தில் இருந்து 2 நிமிட காட்சியை ஸ்நீக் பீக்காக படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் சமூக சேவகர் போன்ற போலி ஆசாமி வழியும் சாக்கடையை சுத்தம் செய்யாமல் அதை பற்றியும் அரசை பற்றியும் விமர்சித்து பேஸ்புக்கில் லைக்குகளை அள்ளுகிறார். அங்கு வரும் காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டனி, சாக்கடையை சுத்தம் செய்ய வாங்க என அழைத்ததும் அந்த ஆசாமி தப்பித்து ஓடுகிறான். பின்னர், தானே களமிறங்கி சாக்கடையை சுத்தம் செய்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் எஸ்.ஐ. நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோரையும் வரவழைத்து சுத்தம் செய்ய வைக்கிறார். இந்த ஸ்நீக் பீக் தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.