தளபதி 63க்கு பூஜை போட்டாச்சு!
சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யின் 63வது படத்திற்கான பூஜை எளிமையாக போடப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் சினிமாஸின் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் தளபதி 63 தயாராகவுள்ளது. இப்படத்தை மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி இயக்குகிறார். மேலும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜய்யின் படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடி யார்? என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. நயன்தாரா அல்லது சமந்தாவாக இருக்கும் என்ற யூகங்கள் கிளம்பி உள்ளன.
சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் படத்தின் பூஜை இன்று எளிமையான முறையில் போடப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்களை அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
படத்திற்கு ஆளப்போறான் தமிழன் என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன.