பொங்கலுக்கு வரோம்... அதிரடியாக அறிவித்த சிம்பு
2019ம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்கு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் ரிலீசாகவுள்ளது.
ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஏறகனவே பொங்கலுக்கு மோதவுள்ளதை படக்குழுவினர் உறுதி செய்துவிட்டனர். இந்நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் பொங்கல் ரேஸில் கலந்து கொள்கிறது.
இதனை இன்று அறிக்கை வெளியிட்டு சிம்பு உறுதிப்படுத்தியுள்ளார். சிம்புவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்ட் வழங்கிய நிலையில், அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் திரண்டு வருகின்றனர்.
தனது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும் இந்த அறிக்கையை சிம்பு வெளியிட்டுள்ளார்.