மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இன்று துவக்கம்!

மகளிர் உலக குத்துச்சண்டை போட்டி இன்று தலைநகர் டெல்லியில் துவங்குகிறது.

10வது மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வரும் நவம்பர் 24ஆம் தேதி வரை நடக்கிறது. இதில், 72 நாடுகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 2006ஆம் ஆண்டிற்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்த போட்டியை இந்தியா நடத்துகிறது.

மேரிகோம் (48கிலோ எடைப்பிரிவு) தலைமையில் களம் காணும் இந்திய அணியில் சரிதா தேவி, பிங்கி ஜங்க்ரா, மனிஷா மான், சோனியா, சிம்ரஜித் கவுர், லவ்லினா போர்க்கோஹைன், சவீத்தி பூரா, பாக்யபதி கச்சாரி, சீமா யூனிபா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐந்து முறை உலக சாம்பியனான மணிப்பூரைச் சேர்ந்த மேரிகோம் ஆறாவது முறையாக தங்கப்பதக்கத்தை தாயகத்துக்கு பரிசளிப்பாரா என்ற எதிர்பார்ப்பு குத்துச்சண்டை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

More News >>