புது படத்துக்கு பூஜை போட்ட ஜோதிகா!
காற்றின் மொழி திரைப்படத்தை அடுத்து ஜோதிகா தனது புதிய படத்தை நேற்று பூஜை போட்டு துவங்கி வைத்தார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே படத்தை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜோதிகாவின் புதிய படம் உருவாகிறது. இன்னும் பெயரிடாத இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் போடப்பட்டது.
இதில், நடிகர் சூர்யா, ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் ஜோதிகா டீச்சராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் எல்.ராஜ் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகா லீடு ரோலில் நடிக்கிறார். ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த வார இறுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.