இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்களிடையே மோதல்- சபாநாயகர் மீதும் தாக்குதல்!

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் கருஜெயசூர்ய மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.

இலங்கையில் திடீர் பிரதமரான மகிந்த ராஜபக்சே மீது நேற்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இத்தீர்மானம் வெற்றி பெற்றதால் ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கறுப்பு நாள் என ராஜபக்சே விமர்சித்தார்.

இதற்கு ரணில் ஆதரவு எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்களும் கூச்சலிட்டனர். இது பின்னர் கைகலப்பாக மாறியது.

அப்போது ரணில் ஆதரவு சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் தாக்கப்பட்டார். இதனால் கோபம் அடைந்த கருஜெசூர்யா சபையில் இருந்து வெளியேறினார். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையேயான மோதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>