சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து- 5 பேர் பலி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடம்பாடி என்ற இடத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலியாகினர்.

சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது சென்னையை நோக்கி வேகமாக வந்த கார் மோதியது. இவ்விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது.

இதில் சென்னையைச் சேர்ந்த கார்த்திக், சதீஷ், பட்டுக்கோட்டை முகமது தகீம் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

More News >>