கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் இருந்து தமிழகம் நோக்கி வரும் கஜா புயல் இன்று இரவு 11.30 மணிக்கு கடலூர்- பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் புவியரசன் கூறியதாவது:

கஜா புயல் இன்று காலை 9.30 மணியளவில் சென்னைக்கு தென்கிழக்கிலும் நாகைக்கு வடகிழக்கிலும் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 25 கி.மீ வேகத்தில் இப்புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

கடலூர்- பாம்பன் இடையே இன்று இரவு 11.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பிருக்கிறது. புயல் கரையை கடக்கும் போது சென்னையில் மிதமான மழை பெய்யக் கூடும்.

இப்புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது. ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

இவ்வாறு புவியரசன் கூறினார்.

 

 

More News >>