ரஜினிகாந்த் கட்சி தொடங்கவே மாட்டார்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆரூடம்
நடிகர் ரஜினிகாந்த் கடைசி வரை கட்சியே தொடங்க மாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ரஜினிகாந்த் குறித்து கூறியதாவது:
ரஜினிகாந்த் கண்டிப்பாக கடைசிவரை கட்சியே ஆரம்பிக்க மாட்டார். கட்சி தொடங்குவதாக நாட்கணக்கில், மாதக் கணக்கில், ஆண்டு கணக்கில் சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு புதுமை நபர் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையத்தில் 7 தமிழர் குறித்து ஒன்றுமே தெரியாமல் பேசியது உண்மையான ரஜினிகாந்த். மறுநாள் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் ரஜினிகாந்த் விளக்கம் அளித்து பேசினார்.
ரஜினிகாந்தை குருமூர்த்தி பின்னிருந்து ஆட்டுவிக்கிறார். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.