நாகை அருகே கரையை கடக்கும் கஜா- 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு! #CycloneGaja #கஜா
கஜா புயல் நாகப்படினம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் கே.ஜே. ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கே.ஜே. ரமேஷ் இன்று கூறியதாவது:
நாகப்பட்டினத்தில் இருந்து 217 கி.மீ. தொலைவில் கஜா புயல் இருக்கிறது. இது மணிக்கு 17 கி.மீ முதல் 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே புயல் கரையைக் கடக்கும். கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், ராமநாதபுரத்தில் கனமழை பெய்யும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
இப்புயலால் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யக் கூடும். சென்னைக்கு புயலால் நேரடியாக பாதிப்பு இல்லை. சென்னையில் பல இடங்களில் இடைவெளிவிட்டு மழை பெய்யக் கூடும்.
கடல் அலையின் உயரம் இயல்பைவிட ஒரு மீட்டர் அதிகமாக இருக்கும். கஜா புயல் கரையை கடந்ததும், அரபிக்கடலுக்கு செல்ல வாய்ப்புள்ளது
இவ்வாறு ரமேஷ் கூறினார்.