தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல்: பயங்கர சீற்றத்துடன் அதிராம்பட்டினத்தில் கரையை கடந்தது

சுமார் 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் அதிராம்பட்டினத்தில் இன்று காலை 9 மணியளவில் கஜா புயல் நாகை அருகே முழுமையாக கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புயலில் சிக்கி 9 பேர் உயிரழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று காலை 9 மணியளவில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் நாகை அருகே அதிராம்பட்டினத்தில் கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது.இதனால், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலின் தாக்கத்தால், மரங்கள், மின் கம்பங்கள் ஆங்காங்கே விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, தீவிர புயலாக வலுவிழந்து திண்டுக்கல்லில் மையம் கொண்டுள்ளது. இதனால், அங்கு சுமார் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது.

இந்நிலையில், கஜா புயல் இன்னும் சற்று நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>