கஜா புயலுக்கு 15 பேர் பலி- தலா ரூ10 லட்சம் நிதி உதவி: முதல்வர் எடப்பாடி

தமிழகத்தை தாக்கிய கஜா புயலுக்கு இதுவரை 15 பேர் பலியாகி உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயல் அதிகாலையில் அதிராம்பட்டினம் அருகே கரையை கடந்தது. தீவிர புயலாக கரையை கடந்ததால் பல மாவட்டங்களில் பலத்த காற்றும் கனமழையும் கொட்டியது.

இதனால் 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. புயலின் தாக்கம் உள்ள மாவட்டங்களில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மாநிலம் முழுவதும் 5,000க்கும் அதிகமான மரங்கள் சாய்ந்துள்ளன.

கஜா புயலால் இதுவரை 15 பேர் பலியாகி உள்ளதாக சேலத்தை அடுத்த ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் 110 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியதால் நாகையில்தான் கடும் பாதிப்பு இருப்பதாகவும் கஜா புயலால் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

More News >>