ரூ24 கோடி மதிப்பிலான 13 சாமி சிலைகள் கடத்தல்... திருச்சி டி.எஸ்.பி. அதிரடி கைது

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் நாறும் பூநாதர் கோவிலில் ரூ24 கோடி மதிப்புள்ள 13 சாமி சிலைகளை திருடி வெளிநாட்டுக்கு கடத்திய வழக்கில் குற்றவாளிகளை தப்பவிட்டதாக திருச்சி மதுவிலக்கு டி.எஸ்.பி ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாறும் பூநாதர் கோவிலில் 2005-ல் 13 சாமி சிலைகள் திருட்டு போயின. ரூ24 கோடி மதிப்புள்ள இந்த சிலைகள் காணாமல் போன வழக்கை அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரித்தார்.

இந்த விசாரணையின் போது சென்னையை சேர்ந்த தீனதயாளன் வீட்டில் இருந்து 4 சிலைகளை மீட்டதாக கூறி நீதிமன்றத்திலும் ஒப்படைத்தார் ஜீவானந்தம், ஆனால் உண்மை குற்றவாளிகளை ஜீவானந்தம் தப்பவிட்டார் என்கிற புகார் எழுந்தது.

இப்புகார் தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தி வந்தார். இவ்விசாரணையில் சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூர். வல்லபபிரகாஷ், ஆதித்ய பிரகாஷ் ஆகியோரை ஜீவானந்தம் தப்பவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து தற்போது திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு டி.எஸ்.பியாக பனிபுரிந்து வந்த ஜீவானந்தத்தை சிலை கடத்தல் போலீசார் கைது செய்தனர். ஜீவானந்தம் போல மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் இவ்வழக்கில் சிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

 

 

More News >>