வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களை பதம் பார்த்துவிட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் நாகை அருகே கரையை கடந்தது. இது தீவிர புயலாகவே கரையை கடந்ததால் கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி உள்மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மொத்தம் 18 மாவட்டங்களில் இயல்பு நிலையை முடக்கியது கஜா புயல். இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இது நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.