விஷாலுக்கு ஓகே சொல்வாரா சன்னிலியோன் ?
விஷாலின் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னிலியோனுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தில் சன்னிலியோன் நடித்து வருகிறார். இந்த படத்தை வடிவுடையான் இயக்கி வருகிறார். கர்நாடகாவில் படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன.
இந்நிலையில், விஷால் நடிக்கும் அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சன்னி லியோனுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு சன்னிலியோன் சம்மதித்தால் ஜெய்யின் வடகறி படத்தை தொடர்ந்து தமிழில் இரண்டாவது பாடலுக்கு சன்னிலியோன் நடனமாடுவார்.
விஷாலின் அயோக்யா படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறர். இப்படத்தில் ராஷி கன்னா விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். டெம்பர் எனும் தெலுங்கு படத்தின் ரீமேக் தான் அயோக்யா என்ற தகவலும் வெளியாகியுள்ளன.