2.0: அக்zwnjஷய் குமாரின் அசுர உழைப்பு வீடியோ ரிலீஸ்!
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படத்தில் பறவை அரக்கனாக நடித்துள்ள அக்ஷய் குமாரின் மேக்கிங் வீடியோ ரிலீசாகியுள்ளது.
இந்தியாவின் பிரம்மாண்ட திரைப்படம் என்ற டேக்லைனுடன் இம்மாத இறுதியில் (நவம்பர் 29) ரிலீசாகவுள்ள படம் 2.0. கபாலி, காலா போன்று ரஜினி படத்திற்கான எதிர்பார்ப்பு மற்றும் விளம்பர யுக்தியை ஷங்கர் ஆரம்பத்தில் செய்த அளவு இறுதியில் செய்யவில்லை.
ரஜினி படம் இம்மாதம் ரிலீசாகிறதா என்ற அடையாளமோ ஆர்ப்பரிப்போ எதிர்பார்ப்போ தமிழகத்தில் பெரிதளவில் இல்லை என்பது தான் உண்மையான நிலவரம்.
ஆனால், இந்தியாவிலேயே 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் முதல் படம் 2.0 தான்.
இந்த படத்தின் பறவைகளுக்காக மக்களை எதிர்க்கும் வில்லனாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். அவரின் மேக்கிங் வீடியோ லைகா நிறுவனம் தற்போது தனது சமூக வலை தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.
ராட்சத பறவை மனிதனுக்காக அக்ஷய் குமார் போட்ட உழைப்பு இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது. இந்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் அளவிற்கு தமிழில் இல்லாததற்கு ரஜினியின் சமீபத்திய பேட்டிகள் மற்றும் அரசியல் நுழைவே காரணம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளன.