லிசா 3டி டீஸர் ரிலீஸ் !
அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள லிசா படத்தின் 3டி டீஸர் தற்போது தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஞ்சலி லிசா எனும் பேய் படத்தின் மூலம் ரசிகர்களை மிரட்ட வருகிறார். பி.ஜி. முத்தையா தயாரிப்பில் ராஜு விஸ்வநாத் எனும் அறிமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
அவள் பட ஸ்டைலில் ஒரு ஹாரர் படமாக லிசா உருவாகியுள்ளது. கடைசியாக ஜெய், அஞ்சலி நடித்த பலூன் படம் தோல்வி படமாக அமைந்தது. அந்த தோல்விகளை அஞ்சலியின் இந்த லிசா சரி கட்டுமா என்பது படத்தின் வெளியீட்டிற்கு பிறகே தெரியவரும்.
இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி ஹாரர் படம் என்ற டேக் லைனுடன் லிசா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.