விமர்சனம்: திமிரு புடிச்சவன் தில்லானவன் !
விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் கணேஷா இயக்கியுள்ள திமிரு புடிச்சவன் இன்று ரிலீசானது. காலை காட்சி பிரச்சனை இந்த படத்திற்கும் வந்தது. அடுத்த அடுத்த தோல்விகளை திமிரு புடிச்சவன் படம் மூலம் முறியடித்துள்ளார் விஜய் அண்டனி.
திமிரு புடிச்சவன் கதையின் ஒன்லைனே படத்தை அனைவரையும் பார்க்க வைக்கும் விதமாக அமைத்துள்ளார் இயக்குநர் கணேஷா. தப்பு செய்றவன் தம்பியா இருந்தாலும் என்கவுண்டர் பண்ணும் திமிரு புடிச்ச போலீசாக விஜய் ஆண்டனி ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
ஆக்ஷன் – மசாலா படம் என்பதா பல இடங்களில் தெலுங்கு பட சாயல் தெரிவது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது. நிவேதா பெத்துராஜின் நக்கலான நடிப்பு படத்திற்கு பிளஸ்.
கதை களம்:
சிறு வயது முதலே தப்பு செய்யும் தனது தம்பியை கண்டித்து வளர்க்கிறார் விஜய் ஆண்டனி. இவரது கண்டிப்பை தாங்க முடியாமல் சென்னைக்கு தப்பித்து வந்து தீனாவிடம் அடியாளாய் மாறுகிறான் விஜய் ஆண்டனியின் தம்பி.
சென்னைக்கு போஸ்டிங் கிடைத்து விஜய் ஆண்டனியும் சென்னை வருகிறார். அப்போது அடியாளாய் இருக்கும் விஜய் ஆண்டனியின் தம்பி, ஒருவரை கொலை செய்ய, தம்பியாக இருந்தாலும் தப்பு தப்புதான் எனக் கூறி என்கவுண்டர் செய்யும் விஜய் ஆண்டனிக்கு இன்ஸ்பெக்டர் பதவி கிடைக்கிறது.
தனது தம்பியை போல பல இளைஞர்களை ரவுடிகளாக்கும் மெயின் வில்லன் தீனாவை சிறு சிறு வழக்குகளில் மாட்டி விட்டு, தனது புத்தி கூர்மையால் எப்படி துவம்சம் செய்கிறார் என்பதே திமிரு புடிச்சவன் படத்தின் கதை. 20 ரூபாய் லஞ்சம் வாங்கும் தர லோக்கல் கான்ஸ்டபிளாக நாயகி நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார்.
கதை நன்றாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் கதா பாத்திரங்களின் தேர்வு படத்திற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனாலும், ஒரு முறை தியேட்டரில் போய் திமிரு புடிச்சவனை பார்க்கலாம்.
விஜய் ஆண்டனி சார் கொஞ்சம் நடிக்க கத்துக் கோங்க, அழகா இருக்கீங்க, நல்ல கதையை தேர்வு செய்றீங்க, ஆனால், உங்க முகத்துல மட்டுமே எக்ஸ்பிரஷன் கம்மியா இருப்பதே உங்க படத்துக்கு வில்லனா அமைஞ்சிடுது.. அதை மட்டும் சரி செய்தால் நீங்களும் 100க்கும் மேற்பட்ட ஆக்ஷன் ஹீரோக்கள் இருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல ஆக்ஷன் ஹீரோவாக சேர்ந்து கொள்வீர்கள்.
திமிரு புடிச்சவன் ரேட்டிங்: 2.5/5.