சூறாவளியுடன் கடந்த கஜா புயல்: 6 மாவட்டங்களில் 51 பேர் பலி

கஜா புயல் கரையை கடந்தபோது, சுமார் 110 கி.மீ., வேகத்தில் சூறைகாற்று வீசி பல்வேறு மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதில், சிக்கி இதுவரை 51 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வங்கக்கடலில் உருவான கஜா புயல், நேற்று காலை 9 மணியளவில் நாகை அருகே அதிரம்பட்டினத்தில் முழுமையாக கரையை கடந்தது. அப்போது, சுமார் 110 கி.மீ., வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இத்துடன், பல்வேறு பகுதிகளில் கனமழையும் கொட்டியது.

கஜாவின் கோரதாண்டவத்தால், பல ஆயிரம் மின்கம்பங்கள், செல்போன் டவர்கள், மரங்கள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து வெளியூர்களுக்கு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.

புயலின் தாக்கத்தால் நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர் ஆகிய கடலோர பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளில் கடல் நீரும், மழை நீரும் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை, புயல் பாதிப்புக்கு வீடுகள் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.கஜா புயல் கரையை கடந்துவிட்ட நிலையில், வங்கக்கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகும். இது புயல் சின்னமாக உருவாகவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>