இருளில் மூழ்கிய வேதாரண்யம்: 3வது நாளாக மக்கள் தவிப்பு

கஜா புயலின் கோர தாண்டவத்தால் வேதாரண்யம் பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, குடிநீர் இன்றி கடுமையாக தவித்து வருகின்றனர்.

கஜா புயல் ஒரு வழியாக கரையை கடந்துவிட்டாலும், போகிறபோக்கில் பல மாவட்டங்களை துவம்சம் செய்துவிட்டு தான் சென்றுள்ளது. நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. இதில், வேதாரண்யம் பகுதியும், அங்குள்ள பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 62 முகாம்களில் 32 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு போதுமான உணவு, குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் அடிப்படை வசதிக்கூட இல்லை என்றும் கூறப்படுகிறது.

புகார்கள் கொடுத்தும் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்றும் பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும், சூறாவளி காற்று வீசியதால் ஆங்காங்கே சாலைகளில் சாய்ந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன், தமிழக காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதால் வேதாரண்யம் இருளிலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்.

More News >>