அடேங்கப்பா! 50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கிய தீபிகா ரன்வீர் ஜோடி!
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் கடந்த நவம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் வெறும் குறிப்பிட்ட 40 பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின் போது யாரும் போட்டோ பிடிக்கக்கூடாது என்ற தடையும் போடப்பட்டது. அதிகாரப்பூர்வ புகைப்படத்தை தீபிகா படுகோனே தனது சமூக வலைதள பக்கங்களில் பின்னர் வெளியிட்டார்.
இந்நிலையில், மும்பையில் 50 கோடி ரூபாய்க்கு புதிய வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும், அதன் உட்புற அலங்கரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நாளை (நவம்பர் 18) இத்தாலியில் இருந்து ரன்வீர் – தீபிகா தம்பதியினர் இந்தியா வருகின்றனர்.
தற்போதைக்கு ரன்வீர் சிங்கின் இல்லத்தில் இருவரும் சிறிது காலம் இருக்கப்போவதாகவும், பிரத்யேகமாக அலங்கரிக்கப்படும் வீட்டின் பணிகள் விரைவாக முடிவடைந்தவுடன் இருவரும் புது இல்லத்திற்கு குடிபுக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.