இது ரஜினியின் அவதார்!
2.0 படத்தில் ரஜினியின் பல அவதாரங்கள் அடங்கிய மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவின் அதிக பட்ஜெட் படமாக உருவாகியுள்ள 2.0 படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி ரிலீசாகிறது.
படத்தை புரமோட் செய்யும் விதமாக படக்குழு மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டு தங்களின் கடின உழைப்பை விளம்பரமாக்கி வருகின்றனர். நேற்று அக்ஷய் குமாரின் ராட்சத பறவை மனிதன் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டு வைரலானது.
இந்நிலையில், தற்போது ரஜினி இப்படத்தில் எடுத்திருக்கும் பல அவதாரங்கள் அடங்கிய வீடியோவை லைகா வெளியிட்டுள்ளது. இதில், ரஜினி வசீகரன், சிட்டி, 2.0 மற்றும் பாடல்காட்சிகளில் இருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.