ஃபேஸ்புக்: சர்ச்சை கருத்துகளை தவிர்க்க வருகிறது புதிய டூல்

ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும், பகிரப்படும் கருத்துகள் அநேக நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 2016ம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பல்வேறு ரஷ்ய அமைப்புகள் தங்கள் கருத்துகளை ஃபேஸ்புக் மூலம் பரப்பி தாக்கத்தை ஏற்படுத்தியது குறித்து அமெரிக்காவின் 'த நியூ யார்க் டைம்ஸ்' இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது.

வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை முதலில் ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் குறைவாக எடைபோட்டு விட்டார்கள். பொதுமக்களிடம் அது பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டபோதுகூட, பிரச்னையை திசைதிருப்பவே முயற்சித்தார்கள் என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.

ஃபேஸ்புக் பற்றி கட்டுரை வெளியாகியிருந்த நிலையில், கடந்த வியாழன் அன்று (நவம்பர் 15) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஃபேஸ்புக் நிறுவனம் சில தவறுகளை செய்துள்ளது என்றும், பிரச்னைகளின் விஸ்தீரணத்தை புரிந்துகொள்ள தவறி விட்டது என்றும் கூறிய அவர், ஃபேஸ்புக்கின் உள்ளடக்கத்தை (content) இன்னும் ஆழமாக ஆய்வு செய்யும்படி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமைப்புக்கு தொடர் பயிற்சி அளிக்கப்படும்.

கொள்கைகளுக்கு மாறான மற்றும் புகாருக்குள்ளாகும் பதிவுகளை பயனர் பார்ப்பதை தடுப்பதற்கான வசதி (tool) உருவாக்கப்படும். அந்த வசதியை பயன்படுத்தி பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் தங்கள் பார்வைக்கு வருவதை தடுத்துக்கொள்ளலாம். பதிவுகள் மற்றும் கருத்துகள் பற்றி புகார் செய்யவும், புகார்களை பெற்றுக்கொள்ளவும் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

More News >>